Enable Javscript for better performance
புதுச்சேரி மாநில இ-வே பில் மதிப்பீடு வரம்பை உயர்த்தக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி மாநில இ-வே பில் மதிப்பீடு வரம்பை உயர்த்தக் கோரிக்கை

    By DIN  |   Published on : 10th June 2018 03:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மாநிலத்துக்குள் நடைபெறும் வியாபாரத்துக்கான இ-வே பில் மதிப்பீட்டு வரம்பை ரூ. 1 லட்சமாக உயர்த்த வேண்டும் என, காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இதுகுறித்து, புதுச்சேரி முதல்வருக்கு காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் ஆனந்தன், சிவகணேஷ் மற்றும் நிர்வாகிகள் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
    காரைக்காலின் வணிகம் ஜிஎஸ்டி-க்கு முன் ஜிஎஸ்டி-க்கு பின் என்று இருவிதமாக மாறியுள்ளது. இதனால், காரைக்கால் வணிகர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
    காரைக்காலின் வியாபாரம் ஏறத்தாழ 70 சதவீதம் தமிழகப் பகுதிகளிலிருந்து வருபவர்களையே நம்பியுள்ளது. காரணம், இதற்கு முன்பு நடைமுறையிலிருந்த வாட் வரியில் இருந்த வித்தியாசமே ஆகும். தற்போது, ஜிஎஸ்டி வந்த பிறகு இரண்டு மாநிலத்திலும் ஒரேவிதமான வரியின் காரணமாக, காரைக்கால் மாவட்டத்தின் வியாபாரத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
    மேலும், இ-வே பில் என்ற புதிய இணையதள ரசீது முறையில், புதுச்சேரி மாநிலத்துக்குள் நடைபெறும் வியாபாரத்தின் மதிப்பு ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் கூடுதலாக வழங்க வேண்டும் என்ற புதிய நிபந்தனைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், இணையதள இணைப்புகளும் சரியாக செயல்படுவதில்லை. இதனால் சிறு வியாபாரிகளுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது.
    தமிழகத்தில் தற்போது உள்மாநில அளவிலான வணிகம் ரூ. 1 லட்சத்துக்கு மேல் இருப்பதற்கு மட்டும் இ-வே பில் செலுத்தினால் போதும் என்ற அளவில் உள்ளது.
    இதே முறையை, புதுச்சேரியிலும் அமல்படுத்தி சிறு, குறு வியாபாரிகளின் சிரமத்தைப் போக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai