Enable Javscript for better performance
புதுவை மக்களின் வளர்ச்சிக்காக என்னை அர்ப்பணித்துள்ளேன்: பிறந்த நாள் விழாவில் ஆளுநர் கிரண் பேடி பேச்ச- Dinamani

சுடச்சுட

    

    புதுவை மக்களின் வளர்ச்சிக்காக என்னை அர்ப்பணித்துள்ளேன்: பிறந்த நாள் விழாவில் ஆளுநர் கிரண் பேடி பேச்சு

    By DIN  |   Published on : 10th June 2018 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை மக்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துள்ளதாக தனது பிறந்த நாள் விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கூறினார்.
    புதுவை மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தனது 69-ஆவது பிறந்த நாளை சனிக்கிழமை கொண்டாடினார். இதையொட்டி, ஆளுநர் மாளிகையில் உள்ள பெருமாள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று அவர் சுவாமி தரிசனம் செய்தார்.
    தொடர்ந்து, மேளதாளங்களுடன் ஆளுநர் மாளிக்கைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, அதிகாரிகள், ஊழியர்களுடன் கிரண் பேடி தனது பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார் .
    முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் உள்ளிட்ட பலர் ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
    பின்னர், துணைநிலை ஆளுநர் கிரண் பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    புதுவை மக்கள் என் மீது காட்டிய அன்புக்கும், பாசத்துக்கும் என்றும் நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன். புதுவையின் வளர்ச்சி, நீர்வளம், விவசாயம், கல்வி, சட்டம் - ஒழுங்கு ஆகியவை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. நான் புதுவையை மிகவும் நேசிக்கிறேன். புதுச்சேரி மிகமிக உன்னதமான இடம். இங்கு எந்த ஒரு திட்டத்தையும் எளிதில் சாதிக்க முடியும். புதுவை மக்களின் பாதுகாப்பு, வளர்ச்சிக்கு என்னை நான் முழுமையாக அர்ப்பணித்துள்ளேன். புதுவை மாநில துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்ற போது செழுமையான, வளமான புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்தான் என் மனதில் உதித்தது. என்னுடைய பணிக்கு ஆண்டவன் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai