Enable Javscript for better performance
ஏடிஎம் பண மோசடி வழக்கு: முக்கிய எதிரியின் தம்பி கைது- Dinamani

சுடச்சுட

    

    ஏடிஎம் பண மோசடி வழக்கு: முக்கிய எதிரியின் தம்பி கைது

    By  புதுச்சேரி,  |   Published on : 11th June 2018 09:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏடிஎம் பண மோசடி வழக்கில் முக்கிய எதிரியான சந்துருஜியின் தம்பியை புதுவை சிபிசிஐடி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
     ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும்போது, ஸ்கிம்மர் கருவி மூலம் ரகசியமாக படம் எடுத்து, ரகசிய எண்களை அறிந்துகொள்வதுடன், போலி ஏடிஎம் அட்டைகள் தயாரித்து, அதன் மூலம் பணம் திருடும் கும்பல் புதுச்சேரியில் செயல்படுவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.
     இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இந்த வழக்கில் மருத்துவர், பொறியாளர், அரசியல்வாதி, சிறு வணிகர்கள் உள்பட
     11 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், பிறரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருட பயன்படுத்திய ஸ்வைப்பிங் இயந்திரம் மற்றும் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
     இந்த வழக்கில் முத்தியால்பேட்டையைச் சேர்ந்த சந்துருஜி முக்கிய எதிரியாக உள்ளார். இதனால் அவரை பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
     அதேநேரத்தில் போலீஸாரின் முயற்சிகள் குறித்து காவல்துறையில் உள்ளவர்களே சந்துருஜிக்கு தெரிவித்து, அவரை தப்ப வைத்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
     இந்த நிலையில் போலீஸார் நடத்திய விசாரணையில் சந்துருஜியின் குடும்பத்தினரும் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதனால் தொடர் விசாரணை நடத்தி முதல் கட்டமாக சந்துருஜியின் தம்பி மணிசந்தரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். சந்திருஜி விரைவில் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai