Enable Javscript for better performance
கூட்டுறவு வங்கியில் திருட்டு முயற்சி: ரூ.3 கோடி நகை, பணம் தப்பின- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு வங்கியில் திருட்டு முயற்சி: ரூ.3 கோடி நகை, பணம் தப்பின

    By  புதுச்சேரி,  |   Published on : 11th June 2018 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை மாநிலம், திருபுவனை கூட்டுறவு வங்கியில் நடந்த திருட்டு முயற்சி தோல்வி அடைந்ததால் ரூ.3 கோடி நகை, பணம் தப்பின.
     புதுவை மாநில எல்லைப் பகுதியான மதகடிப்பட்டில் பார்த்திபன் என்பவருக்குச் சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் 5 கடைகள் உள்ளன. அதில் ஒரு கடையில், திருபுவனை விவசாயிகள் சேவை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.
     இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு மர்மக் கும்பல் வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருட முயன்றுள்ளனர். வங்கியில் இருந்த பாதுகாப்பு அறையின் கதவை உடைக்க முடியாததால், தாங்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக கண்காணிப்பு கேமரா, ஹார்ட்டிஸ்க் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். வங்கி பாதுகாப்பு அறையை உடைக்க முடியாததால் ரூ.3 கோடி மதிப்பிலான நகை, பணம் தப்பின.
     இது தவிர, வங்கி அருகே இருந்த பழைய காகித கடை, பிளைவுட் கடை ஆகியவற்றின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்தன. அங்கு பணம் ஏதும் இல்லாததால் திருட்டு முயற்சி தோல்வியில் முடிந்தது.
     இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அந்த வழியாகச் சென்றவர்கள் வங்கியின் பூட்டு உடைந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, திருபுவனை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் கலைச்செல்வன், உதவி ஆய்வாளர் பிரியா ஆகியோர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
     இப்பகுதியையொட்டி ஏராளமான தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. மேலும் பல இடங்களில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் இப்பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். அவர்களில் யாராவது இந்த திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai