Enable Javscript for better performance
சாலையை ஆக்கிரமித்த கடைகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி-வழுதாவூர் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த காய்கறி, இறைச்சிக் கடைகளை உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.
     உழவர்கரை நகராட்சி கட்டுப்பாட்டில் காந்தி நகர் மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றதால், அங்கிருந்த காய்கறி மற்றும் இறைச்சிக் கடைகள் வழுதாவூர் சாலையோரத்தில் இயங்கி வந்தன. இந்த நிலையில், மார்க்கெட் சீரமைப்பு முடிந்த நிலையில், உழவர்கரை நகராட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட கடைகளுக்கு வியாபாரிகள் செல்லவில்லை.
     தொடர்ந்து சாலையோரமே வியாபாரம் செய்து வந்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, மார்க்கெட்டில் கடை வைத்துக் கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
     வியாபாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமையில் செயற்பொறியாளர் குணசேகரன், உதவிப் பொறியாளர்கள் கலிவரதன், ராமநாதன் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai