Enable Javscript for better performance
ஜிப்மர் செவிலியர் அதிகாரி, எல்டிசி பணி தேர்வு: 17,886 பேர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ஜிப்மர் செவிலியர் அதிகாரி, எல்டிசி பணி தேர்வு: 17,886 பேர் பங்கேற்பு

    By  புதுச்சேரி,  |   Published on : 11th June 2018 09:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி ஜிப்மரில் காலியாக உள்ள செவிலியர் அதிகாரி, எல்டிசி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற தேர்வில் நாடு முழுவதும் 17,886 பேர் தேர்வு எழுதினர்.
     புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 91 செவிலிய அதிகாரி பணியிடங்கள், 24 எல்டிசி பணியிடங்கள் என மொத்தம் 115 இடங்கள் காலியாக உள்ளன.
     இந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் 3.30 மணி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 59 மையங்களில் ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற்றது.
     செவிலியர் அதிகாரி பதவிக்கு 14,995 பேர், எல்டிசி பதவிக்கு 6, 359 பேர் என மொத்தம் 21,354 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
     இந்த நிலையில், செவிலியர் அதிகாரி பணிக்கு 12,000 பேரும், எல்டிசி பணிக்கு 5,886 பேரும் பங்கேற்று தேர்வு எழுதினர்.
     புதுச்சேரியை பொறுத்தவரை மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கிறிஸ்ட் பொறியியல் கல்லூரி, ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, விழுப்புரம் ஏகேடி மெமோரியல் பொறியியல் கல்லூரி, ஐஎஃப்இடி பொறியியல் கல்லூரி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெற்றது.
     ஜிப்மரின் இயக்குநர் மற்றும் மூத்த அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் இத்தேர்வு நடைபெற்றது.
     தேர்வு முடிவுகள் ஜூன் 16-ஆம் தேதிக்குள் வெளியாகும் என்றும், எல்டிசி பணிக்கு கூடுதலாக திறனறித் தேர்வு நடத்தப்படும் என்றும் ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai