Enable Javscript for better performance
திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை புதுச்சேரி போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
     புதுச்சேரி நெல்லித்தோப்பு அண்ணா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மகேந்திரன் (28).
     கட்டடப் பொறியாளரான இவர் தனது வீட்டு சாவியை தினமும் வீட்டுக்கு வெளியில் காலணிக்குள் (ஷூவுக்குள்) வைத்துவிட்டு செல்வது வழக்கம்.
     இந்த நிலையில், கடந்த மாதம் இவரது வீட்டில் 8 பவுன் நகை மற்றும் ரூ.83 ஆயிரம் பணம் திருடு போனது. இதுகுறித்து, மகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சனிக்கிழமை இரவு வந்த மர்ம நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
     அப்போது அவர் புதுவை எல்லை விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் இந்திரா நகரைச் சேர்ந்த சுந்தர் (எ) டேனியல் (32) என்பதும், இவரது சொந்த ஊர் கோயம்புத்தூர் என்பதும், புதுச்சேரி கட்டடப் பொறியாளர் மகேந்திரன் வீட்டில் நகை மற்றும் பணம் திருடிய சம்பவத்தில் இவருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.
     இதையடுத்து அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் இவர் மீது தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதும், 4 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. போலீஸார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு செல்லிடப்பேசி, கொலுசு, தங்கச் சங்கிலி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai