Enable Javscript for better performance
புதுச்சேரியில் பாவேந்தர் இலக்கிய திங்கள் விழா- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் பாவேந்தர் இலக்கிய திங்கள் விழா

    By  புதுச்சேரி,  |   Published on : 11th June 2018 09:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி பாரதிதாசன் அருங்காட்சியத்தில் பாவேந்தர் கலை, இலக்கிய திங்கள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     மாதம்தோறும் பாவேந்தர் கலை, இலக்கிய திங்கள் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதம் சர் ஏ.டி. பன்னீர்செல்வமும், பாரதிதாசனும் என்னும் தலைப்பில் இந்த விழா நடைபெற்றது.
     விழாவுக்கு தலைமை வகித்து கவிஞர் கோ.பாரதி பேசியதாவது: பின்னடைவைத் தரும் சிந்தனைகளுக்கு எதிராக போராடியவர் பன்னீர்செல்வம். அரசியல் தலைவர்களில் எளிமையாகவும் மக்கள் அன்பையும் பெற்றவர் அவர்.
     தன்னலம் இன்றி பொதுத்தொண்டு செய்வோர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. தன்னலம் மறந்து பொதுத்தொண்டு செய்வோர் எண்ணிக்கை பெருக வேண்டும்.
     சுற்றுச்சூழல், குடும்பச்சூழல் உள்பட எல்லாவற்றிலும் துணிவும், ஒன்றுபட்ட சிந்தனையும் வளர தன்னலமற்ற பெரியோர்களின் வாழ்க்கை நெறிமுறைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்றார் பாரதி.
     விழாவில் தமிழ்மாமணி மன்னர் மன்னன் முன்னிலை வகித்தார். தந்தை சொல்படி நட என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.
     இதில் 40 கவிஞர்கள் பங்கேற்று கவிதைகளை அரங்கேற்றினர்.
     பாவேந்தர் இயற்றிய புரட்சிகவி என்னும் நூலை பற்றி முனைவர் வீ.ஜிவா உரையாற்றினார்.
     கடமை வீரர் கக்கன் என்ற தலைப்பில் முனைவர் ம.ஏ.கிருட்டிணகுமாரும், கற்றுத்தரும் சுற்றுச்சூழல் என்னும் தலைப்பில் மாணவர் திருக்குறள் மு.பிரகதீஸ்வரனும் உரையாற்றினர்.
     எங்கள் குடும்பம் என்னும் தலைப்பில் நகலக உரிமையாளர் வேலாயுதம் உரையாற்றினார்.
     விழாவில், நல்லாசிரியர் வைத்தி கஸ்தூரி, கவிஞர்கள் ரமேஷ் பைரவி, சத்தியமூர்த்தி, தேன்மொழி, ஓவியர் பி.சுகுணா, கலைமாமணி செல்வத்துரை நீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai