Enable Javscript for better performance
புதுச்சேரி ஓவியக் கண்காட்சியில் மனதை கவரும் ஓவியங்கள்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி ஓவியக் கண்காட்சியில் மனதை கவரும் ஓவியங்கள்

    By  புதுச்சேரி,  |   Published on : 11th June 2018 09:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் சனிக்கிழமை மாலை தொடங்கிய ஓவியக் கண்காட்சியில் மனதைக் கவரும் வகையிலான ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
     ஓவியர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருப்பதைப்போல், அதை வாங்கி ரசிக்கும் மக்களில் ஒவ்வொரு வகையினருக்கும் ஒவ்வொரு பார்வை உள்ளது.
     அதனால் எங்கும் ஓவியக்கண்காட்சி நடைபெறுவதாக அறிந்து, ஓவிய ரசிகர்கள் சென்றால் அந்தக் கண்காட்சியில் தங்களது பார்வைக்கு ஏற்ற ஓவியங்கள் இல்லாததை அறிந்து ஓவியங்களை வாங்கும் எண்ணம் இருந்தாலும் வாங்காமல் வந்து விடுகின்றனர்.
     இதனை கருத்தில் கொண்டு நிகழ்ச்சிகளுக்கான செலவை குறைத்து, அதிக படைப்புகளை இடம்பெறச் செய்து வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் நோக்கில் ஓவியர் பிபின் ஜான்சன், ஓவியர்கள் 8 பேரை ஒருங்கிணைத்து "த ஜென்டில்மேன் என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
     இந்த நிறுவனத்தின் முதல் ஓவியக்கண்காட்சி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள புரோமோனட் ஹோட்டலில் சனிக்கிழமை மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
     ஓவியர்களின் வாழ்க்கை சுழற்சியின் ஒரு யோசனை என்னும் தலைப்பிலான இந்தக் கண்காட்சியில் 37 படைப்புகள் இடம் பெற்றுள்ளன. அதில் 20 எண்ம ஓவியங்கள், 10 புகைப்படங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
     இதில், தேசிய விருது பெற்ற ஓவியர் ராஜேஷின் ஓவியங்கள் உள்பட பிபின் ஜான்சன், விவேக், ராஷ்மிகா சுஷ்மிதா ஆகியோரின் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.
     அத்துடன், அலுமினி லைட் மற்றும் லைப் அகாதெமியில் பயின்ற புகைப்படக் கலைஞர்களான பாலமுருகன், சதாசிவம், ஸ்ரீராம் ஆகியோரின் 12 கலை நயமான புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சி ஜூலை 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
     இதுகுறித்து, நிறுவனர் பிபின் ஜான்சன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுவையில் ஏராளமான ஓவியர்கள் இருக்கின்றனர். அவர்களின் திறமை வெளியில் தெரியாமலேயே போய்விடுகிறது. சிலர் ஓவியங்களை வரைந்து அவர்களது வீட்டிலே வைத்துக் கொள்கின்றனர். அதை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை.
     ஓவியக் கண்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பல்வேறு சங்கடங்கள் உள்ளன. அவைகளை எதிர்கொண்டு நல்ல ஓவியங்களை மக்களிடம் சேர்க்கும் வகையில் நிறுவனத்தை ஆரம்பித்து கண்காட்சி நடத்தி வருகிறோம். தற்போது 20 ஓவியர்கள் தங்களது கலைப் படைப்புகளை தந்து வருகின்றனர். அதில் எட்டு ஓவியர்களின் கண்காட்சிதான் தற்போது நடைபெற்று வருகிறது என்றார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai