Enable Javscript for better performance
"மாணவர்கள் முதலில் கடமையை செய்ய வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    உரிமையைப் பற்றி பேசும் மாணவர்கள் முதலில் தங்களது கடமையை செய்ய வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தினார்.
     புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற மாநில ஆளுநர்களுக்கான மாநாட்டில் புதிய திட்டத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்திருந்தார். இந்த மாநாட்டில் புதுவை சார்பில் ஆளுநர் கிரண் பேடியும் பங்கேற்றார்.
     கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் பெரு நிறுவனங்கள் செயல்படுத்தி வரும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை போல, பல்கலைக்கழகங்களும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
     இந்த நிலையில், தேசிய அளவில் இத்திட்டத்துக்கான முதல் தொடக்க விழா புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
     விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணைநிலை ஆளுநர் கிரண் பேடி திட்டத்தை தொடக்கிவைத்துப் பேசியதாவது:
     மாணவப் பருவத்தில் எந்த அளவுக்கு சமூகத்துக்கு உழைக்கிறோமோ அந்த அளவுக்கு படிப்பறிவோடு, அனுபவம் சார்ந்த பட்டறிவும் கிடைக்கும். இதுபோன்ற திறன் சார்ந்த வாழ்க்கை அனுபவங்கள்தான் எதிர்காலத்தில் முன்னேற உதவுகின்றன.
     ஆனால், இதுபோன்ற அனுபவங்களை வெறும் கல்லுôரி மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் கல்வி முறையில் இருந்து பெற முடியாது. மாறாக, அடுத்தவர்களுக்காக சேவையாற்றும் போதுதான் கிடைக்கும்.
     மாணவர்கள் தாங்கள் விரும்பிய துறை எதுவாக இருந்தாலும் தங்களின் ஆர்வம் திறமைக்கேற்ப, சமூகப் பணிகளில் ஈடுபட முயற்சிக்க வேண்டும். துôய்மை இந்தியா மாணவர் பயிற்சிக்கான திட்டத்தில் புதுவை மாணவர்கள் மிகக் குறைந்த அளவே தங்கள் பெயர்களை பதிவுச் செய்திருக்கின்றனர்.
     புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் அரசு, தனியார் கல்லுôரி மாணவர்கள் அனைவரும் இந்தத் திட்ட மேம்பாட்டிற்கான பயிற்சியில் ஈடுபட தங்கள் பெயர்களை மத்திய அரசின் இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும்.
     மாணவர்கள் சிறு சிறு குழுக்களாகவும் இயங்கி அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ஏழை மக்களுக்கான திட்டங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கவும் முயற்சிக்க வேண்டும்.
     உரிமையைப் பற்றி பேசும் மாணவர்கள் முதலில் தங்கள் முன் உள்ள கடமைகளையும், பொறுப்புகளையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்றார் ஆளுநர் கிரண் பேடி.
     முன்னதாக, 69-ஆவது பிறந்த நாள் கொண்டாடிய ஆளுநர் கிரண் பேடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், பல்கலைக்கழகம் சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
     விழாவில் பல்கலை. துணைவேந்தர் குர்மீத்சிங், பதிவாளர் தரணிக்கரசு, நிதி அதிகாரி பிரகாஷ், நுôலகர் சம்யுக்தா, தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai