Enable Javscript for better performance
ரயில் கால அட்டவணை அறிமுகம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் ரயில் கால அட்டவணை சனிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
     ரயில் பயணிகள் வசதிக்காக 2018-ஆம் ஆண்டுக்கான புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் வழித்தடங்களில் செல்லும் ரயில்களின் காலஅட்டவணை வாசவி கிளப் தயாரித்துள்ளது.
     இந்தக் கால அட்டவணை கையேட்டை ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கடந்த மாதம் வெளியிட்டார்.
     இந்த நிலையில், இந்த கையேடு பல்வேறு பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் இந்தக் கையேடு அறிமுக நிகழ்ச்சி காந்தி வீதியில் உள்ள வாசவி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. வாசவி கிளப்பின் சர்வதேச துணைத் தலைவர் மதுரை ரவிச்சந்திரன் கையேட்டை அறிமுப்படுத்த, அதை புதுச்சேரி ரயில் பயணிகள் சங்கத் தலைவர் கே.கே.சாமி பெற்றுக்கொண்டார்.
     நிகழ்ச்சியில், வாசவி கிளப் புதுச்சேரி வட்டாரத் தலைவர் சித்தரஞ்சன் உள்பட பலர் பங்கேற்றனர். ரயில் பயணிகள் இந்த கையேட்டை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai