ராவண காவிய தொடர் சொற்பொழிவு
By புதுச்சேரி, | Published on : 11th June 2018 09:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுச்சேரியில் ராவண காவியத் தொடர் சொற்பொழிவு சனிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி ஆண்டுதோறும் புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.
அதன் ஐந்தாம் ஆண்டு தொடர் சொற்பொழிவு தமிழ்ச் சங்க அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. புதுவை திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி சொற்பொழிவை தொடக்கிவைத்தார். பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.ந.நடராசன் தலைமை வகித்தார்.
தனித்தமிழ் இயக்கத் தலைவர் பாவலர் முனைவர் க.தமிழமல்லன் ஐந்தாம் சொற்பொழிவை நிகழ்த்தினார். ராவண காவியத்தின் மனையறப் படலம், அரசியல் படலம், விந்தப்படலம் ஆகிய படலங்கள் அச்சொற்பொழிவில் இடம் பெற்றன. ராவணனுக்குத் தான் மனையறப் படலம் அமைந்தது. ஆனால், ராமாயணத்தில் ராமன் திருமணப்படலத்தின் பின் மனையறப்படலம் அமையவில்லை என்பதை நுôலின் துணைகொண்டு முனைவர் க.தமிழமல்லன் விளக்கிப் பேசினார். நிகழ்ச்சியில் வெல்லும் துôய தமிழ்ப் புரவலர் கி.கலியபெருமாள், திராவிடர் கழகச் செயலர் அறிவழகன், திராவிடர் கழக மண்டலத் தலைவர் அரசு உள்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.