Enable Javscript for better performance
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை புதுவையில் தடை செய்ய செயல் திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை புதுவையில் தடை செய்ய செயல் திட்டம்

    By  புதுச்சேரி,  |   Published on : 12th June 2018 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    plastic

    ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்யும் செயல் திட்டம் 15 நாள்களுக்குள் புதுவை அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
     புதுவையில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை முழுமையாக தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சுற்றுச்சூழல் துறை மு.அமைச்சர் கந்தசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
     இதில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறைச் செயலர் பார்த்திபன், இயக்குநர் ஸ்மித்தா, பொறியாளர் ரமேஷ், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் கலந்து கொண்டனர்.
     இதில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களான பைகள், கப் புகள் போன்றவற்றை புதுவையில் தடை செய்வதற்கான வழிமுறைகள், சட்ட வழிகள் மற்றும் மாற்றுப் பொருள்களின் உற்பத்தி போன்றவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஆணையர்கள் சோதனை நடத்தி உற்பத்தி செய்வதை தடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டார்.
     ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகத்தை தடை செய்வதற்கான செயல் திட்டத்தை 15 நாள்களில் அளிப்பதாக அமைச்சரிடம், துறைச் செயலர் உறுதி அளித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai