Enable Javscript for better performance
தலைமைக் காவலர்களுக்கு சிறப்புப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் தலைமைக் காவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஒருங்கிணைந்த 45 நாள் சிறப்புப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
     காவலர் பயிற்சிப் பள்ளியில் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமை சட்டம்- ஒழுங்கு முதுநிலை எஸ்.பி. அபூர்வா குப்தா தொடக்கிவைத்தார். தொடக்க விழாவில், காவலர் பயிற்சிப் பள்ளி எஸ்.பி. கொண்டா வெங்கடேஸ்வரராவ் வரவேற்றார். ஓய்வுபெற்ற எஸ்.பி. சண்முகசுந்தரம், வழக்குரைஞர்கள் சந்திரசேகரன், அரிக்குமார், கோபால் ஆகியோர் சட்ட வகுப்புகளை நடத்துகின்றனர். பயிற்சி முகாமில் கவாத்து, ஆயுதம், கணினி கற்றல், அரசு மருத்துவமனையை பார்வையிடல், சிறைச்சாலை, பரிசோதனைக்கூடம், மலையேற்றம், துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சியில் தலைமைக் காவலர்களாக பதவி உயர்வு பெற்ற 65 பேர் பங்கேற்றுள்ளனர்.
     அவர்களுக்கு 45 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai