Enable Javscript for better performance
தேங்காய்த்திட்டு கோயிலில் உண்டியல் பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    தேங்காய்த்திட்டு கோயிலில் உண்டியல் பணம் திருட்டு

    By    புதுச்சேரி,  |   Published on : 12th June 2018 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி அருகே தேங்காய்த்திட்டு வட பத்திரகாளியம்மன் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     புதுச்சேரி அருகே முருங்கப்பாக்கம் பகுதியில் அண்மையில் 3 கோயில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கைகள் திருடப்பட்டன. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தேங்காய்த்திட்டு பகுதியில் உள்ள வட பத்திரகாளியம்மன் கோயிலை திங்கள்கிழமை காலை பூசாரி ராமு திறக்க வந்தார்.
     அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த உண்டியல் திறக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணம் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
     இதுகுறித்து, பூசாரி ராமு அளித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai