Enable Javscript for better performance
தேசிய பார்வையற்றோர் இணையத்துக்கு புதுவை கிளை நிர்வாகிகள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    தேசிய பார்வையற்றோர் இணையத்துக்கு புதுவை கிளை நிர்வாகிகள் தேர்வு

    By  புதுச்சேரி,  |   Published on : 12th June 2018 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய பார்வையற்றோர் இணையத்தின் புதுவை கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
     தேசிய பார்வையற்றோர் இணையத்தின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     இணையத்தின் தென் இந்திய திட்ட இயக்குநர் மனோகரன் தலைமை வகித்தார். தமிழக கிளைத் தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
     புதுவை கிளை பொதுச்செயலர் மணிகண்டன், காரைக்கால் அமைப்பாளர் சிவக்குமார் மற்றும் அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
     கூட்டத்தில், தேசிய பார்வையற்றோர் இணையத்தின் புதுவை கிளைத் தலைவராக அன்புராஜ், பொருளாளராக செந்தில், துணைத் தலைவர்களாக வெங்கடபதி, அந்தோணிசாமி, இணைச் செயலர்களாக குமார், தினேஷ், செயற்குழு உறுப்பினர்களாக சோமசுந்தரம், முருகன், குமரகுரு, மகளிர் அணி ஒருங்கிணைப்பாளராக நர்மதா ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
     மேலும், காதுகேளாத, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளில் சர்வதேச அளவில் முதலாவது பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, ஹெலன் கெல்லரின் 139-ஆவது பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai