Enable Javscript for better performance
பிணையில் வந்த 3 பேர் ஊருக்குள் நுழையத் தடை- Dinamani

சுடச்சுட

    

    குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த 3 பேர் ஊருக்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்தது.
     புதுவை பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பெரியசாமி மகன் சுதன் (எ) பிரதீப் (25), வில்லியனூர் ஒதியம்பேட்டையைச் சேர்ந்த அய்யப்பன் (எ) தொட்டி அய்யப்பன் (25), உத்திரவாகினிபேட்டையைச் சேர்ந்தவர் பாம்ரவி (எ) ரவிவர்மன் ( 26) ஆகிய மூவரும் உத்தரவாகினிபேட்டையைச் சேர்ந்த ஏழுமலை என்பவரை கொலை செய்த வழக்கில் எதிரிகளாக கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் சில மாதங்களாக வைக்கப்பட்டிருந்தனர்.
     இந்த நிலையில், கடந்த வாரம் இவர்கள் 3 பேரும் பிணையில் வெளி வந்தனர். இவர்கள் வெளியே வந்ததால் உத்தரவாகினிபேட்டை பகுதியில் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, 3 பேரையும் ஊருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று புதுச்சேரி நீதிமன்றத்தில் திருபுவனை போலீஸார் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனர். அதன்படி, 3 பேரும் உத்தரவாகினிபேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிக்குள் நுழைய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai