Enable Javscript for better performance
பிற்பட்டோர் சங்க பிரதிநிதிகள் முதல்வருடன் சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    

    பிற்பட்டோர் சங்க பிரதிநிதிகள் முதல்வருடன் சந்திப்பு

    By  புதுச்சேரி,  |   Published on : 12th June 2018 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத் தலைவர் கிருஷ்ணய்யா (தெலங்கானா எம்.எல்.ஏ) தலைமையிலான பிரதிநிதிகள் முதல்வர் வே.நாராயணசாமியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
     புதுவை சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் முன்னிலையில் இந்தச் சந்திப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
     சந்திப்புக்குப் பிறகு முதல்வர் நாராயணசாமியிடம் சங்க நிர்வாகிகள் கொடுத்த மனுவில், புதுவை சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதம் இடம் ஒதுக்கிட்டை அமல்படுத்த மசோதா தாக்கல் செய்ய வேண்டும். 50 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டம் ஆந்திர சட்டப்பேரவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், இதுதொடர்பான மசோதாவை நிறைவேற்ற தெலங்கானா அரசும் ஆலோசித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
     புதுவையிலும் இதற்கான சட்ட மசோதாவை அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் நாராயணசாமி உறுதி அளித்துள்ளதாக அச்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
     இந்தச் சந்திப்பின்போது, ஆந்திர பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத் தலைவர் நவது வேங்கட் ராமானா, துணைத் தலைவர் குஜ்ஜா கிருஷ்ணா, தெலங்கானா பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத் தலைவர் பூப்பேஷ் சாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai