Enable Javscript for better performance
ஆளுநர் மாளிகையில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி: முதல்வர், எதிர்கட்சித் தலைவர் புறக்கணிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆளுநர் மாளிகையில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி: முதல்வர், எதிர்கட்சித் தலைவர் புறக்கணிப்பு

    By  புதுச்சேரி,  |   Published on : 13th June 2018 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kb

    புதுவை ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை முதல்வர் வே.நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி மற்றும் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.
     நிகழ்ச்சியில் பங்கேற்க 100 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலும் இஸ்லாமிய அதிகாரிகளும், பெண்களும், மூத்த குடிமக்களும் இடம் பெற்றிருந்தனர்.
     ஆளுநர் மாளிகை கொள்கையாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அசைவம் தவிர்த்து சைவம் மட்டுமே இடம்பெறுகிறது.
     இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை இஸ்லாமிய மக்களுக்கான இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஆளுநர் கிரண் பேடி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் இஸ்லாமியர்கள் பங்கேற்ற சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகைக்குப் பிறகு ஆளுநர் கிரண் பேடி இஸ்லாமியர்களுக்கு நோன்பு கஞ்சி மற்றும் விருந்தளித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் இரா.கமலக்கண்ணன்,
     தலைமைச் செயலர் அஸ்வனி குமார், காவல் துறை இயக்குநர் சுனில்குமார் கெüதம், என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அசோக் ஆனந்த், சுகுமாரன் மற்றும் அரசுச் செயலர்கள் பங்கேற்றனர்.
     நிகழ்ச்சியை முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, பல அமைச்சர்கள் மற்றும் பெரும்பாலான எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர்.
     இந்து முன்னணி எதிர்ப்பு: ஆளுநர் மாளிகையில் இஸ்லாமியர்களுக்கு அரசு செலவில் இஃப்தார் விருந்து நடப்பது பாரபட்சமான செயல் என்றும், பொங்கல் பண்டிகையின் பொங்கல் விருந்து வழங்காத ஆளுநரின் செயலைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
     சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai