கொம்பாக்கம் கோயில் உண்டியலில் திருட்டு
By புதுச்சேரி, | Published on : 13th June 2018 08:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுச்சேரி அருகே கொம்பாம்பாக்கத்தில் உள்ள கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது.
புதுச்சேரி முதலியார்பேட்டை அருகே கொம்பாக்கத்தில் பாப்பாஞ்சாவடி பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் திங்கள்கிழமை இரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றனர்.
அருகே உள்ள முருங்கப்பாக்கத்தில் கடந்த வாரம் தொடர்ந்து 3 கோயில்களில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றனர். இதுதொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில், கொம்பாக்கம் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த இரண்டு மாதங்களில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் நகை, பணம் திருடப்பட்டுள்ளது. இச்சம்பவங்களில் தொடர்புடைய எதிரிகளும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இச்சம்பவங்களை கட்டுப்படுத்த காவல் துறை இயக்குநர் சுனில்குமார் கெüதம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.