Enable Javscript for better performance
ஜிப்மரில் எம்பிபிஎஸ் முதல்கட்ட கலந்தாய்வு: ஜூன் 26-இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஜிப்மரில் எம்பிபிஎஸ் முதல்கட்ட கலந்தாய்வு: ஜூன் 26-இல் தொடக்கம்

    By  புதுச்சேரி,  |   Published on : 13th June 2018 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை ஜிப்மரில் எம்பிபிஎஸ் படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 26 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
     இது குறித்து ஜிப்மர் நிர்வாகம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
     ஜிப்மரில் 2018-19-ஆம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ் படிப்புக்கு நடைபெற்ற நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 8-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இடஒதுக்கீட்டு பிரிவின்படி தகுதிப் பட்டியல் ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜூன் 26 முதல் 28-ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஜூன் 26-இல் பொதுப் பிரிவு, மாற்றுத் திறனாளிகளுக்கும் மற்றும் புதுச்சேரி மாற்றுத் திறனாளிகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
     ஜூன் 27-இல் ஓ.பி.சி., எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கும், 28-இல் புதுச்சேரி பொதுப்பிரிவு, ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., வெளிநாடு வாழ் இந்தியர், ஓ.சி.ஐ. பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
     ஜிப்மரை பொருத்தவரை எம்.பி.பி.எஸ். படிப்பில் புதுச்சேரியில் 150 இடங்கள், காரைக்காலில் 50 இடங்கள் என மொத்தம் 200 இடங்கள் உள்ளன. பொதுப் பிரிவில் புதுச்சேரி ஜிப்மரில் 55 இடங்கள், காரைக்கால் ஜிப்மரில் 19 என மொத்தம் 74 இடங்கள் உள்ளன.
     பிற்பட்டோர் பிரிவில் (ஓ.பி.சி.) புதுச்சேரியில் 28 இடங்கள், காரைக்காலில் 9 இடங்கள் என மொத்தம் 37 இடங்கள் உள்ளன. எஸ்.சி. பிரிவில் புதுச்சேரியில் 15, காரைக்காலில் 5 என மொத்தம் 20 இடங்களும், எஸ்.டி. பிரிவில் புதுச்சேரியில் 7, காரைக்காலில் 2 என மொத்தம் 9 இடங்கள் உள்ளன.
     புதுவை மாநிலத்துக்கான ஒதுக்கீட்டின்படி, பொதுப் பிரிவில் புதுச்சேரியில் 22 இடங்கள், காரைக்காலில் 9 என மொத்தம் 31 இடங்கள் உள்ளன. ஓ.பி.சி. பிரிவில் புதுச்சேரியில் 10 இடங்கள், காரைக்காலில் 3 இடங்கள் என மொத்தம் 13 இடங்களும், எஸ்.சி. பிரிவில் புதுச்சேரியில் 5 இடங்கள், காரைக்காலில் ஒன்று என மொத்தம் 6 இடங்களும், எஸ்.டி. பிரிவில் புதுச்சேரியில் 3, காரைக்காலில் ஒன்று என மொத்தம் 4 இடங்களும் உள்ளன.
     வெளிநாடு வாழ் இந்தியர் மற்றும் ஓ.சி.ஐ. ஒதுக்கீட்டில் புதுச்சேரியில் 5 இடங்கள், காரைக்காலில் ஒன்று என மொத்தம் 6 இடங்கள் உள்ளன. மாணவர்களின் தரவரிசை அடிப்படையில் ஜூன் 26-ஆம் தேதி மதியம் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
     ஜிப்மர் கல்வி வளாக தேர்வுப் பிரிவில் சான்றிதழ் மற்றும் பயோமெட்ரிக்ஸ் சரிபார்த்தல் நடைபெறும். மாணவர்கள் கலந்தாய்வுக்கு வரும்போது அசல் சான்றிதழ், நிறுவனத்தின் மூலம் கையொப்பம் இடப்பட்ட போனோபைட் சான்றிதழ், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட குடியிருப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, நுழைவுச் சீட்டு ஆகியவற்றில் அசல் மற்றும் நகல் படிவத்தையும் எடுத்துவர வேண்டும்.
     புதுச்சேரி மற்றும் காரைக்கால் வளாகத்தை தேர்வு செய்த பின்பு எந்தச் சூழ்நிலையிலும் வளாகத்தை மாற்ற அனுமதிக்கப்படாது. ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் பிரிவை மாற்றம் செய்யவும் அனுமதிக்கப்படாது. கலந்தாய்வு நடந்த தினத்தில் மதியம் மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai