Enable Javscript for better performance
தனியார் பள்ளிகள் மீதான புகார்களை தெரிவிக்க தனி கட்டுப்பாட்டு அறை: கல்வித் துறைக்கு ஆளுநர் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    தனியார் பள்ளிகள் மீதான புகார்களை தெரிவிக்க தனி கட்டுப்பாட்டு அறை: கல்வித் துறைக்கு ஆளுநர் உத்தரவு

    By    புதுச்சேரி,  |   Published on : 13th June 2018 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் பள்ளிகள் மீதான புகார்களை தெரிவிக்க தனி கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும் என்று கல்வித் துறைக்கு ஆளுநர் கிரண் பேடி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
     காவல் துறையில் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
     அந்த வகையில் தனக்கு வந்த தகவல்களை ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
     அதில், தனியார் பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் தர மறுப்பது மற்றும் லட்சக் கணக்கில் நன்கொடை கேட்பதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
     இதையடுத்து, தனியார் பள்ளிகள் மீது மக்கள் அளிக்கும் புகார்களுக்காக கல்வித் துறை தனியாக ஒரு கட்டுப்பாட்டு அறையை தொடங்க வேண்டும். மேலும், தனியார் கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களை மிரட்டுவது தொடர்பான காட்சிகளை பதிவு செய்ய கல்வி நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும், அக்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கல்வித் துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai