பள்ளி கல்வித் துறையில் சிறப்பு உதவி மையம்
By புதுச்சேரி, | Published on : 13th June 2018 08:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுவையில் பள்ளிக் கல்வி சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள சிறப்பு உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மாநில பள்ளிக் கல்வி இணை இயக்குநர் குப்புசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பள்ளிக் கல்வி சம்பந்தமான சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் கல்வித் துறையில் சிறப்பு உதவி மைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சேவை அனைத்து வேலை நாள்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும்.
இதைப் பயன்படுத்தி மாணவர்கள், பெற்றோர்கள் தங்களது பள்ளிக் கல்வி சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மேலும், இதுகுறித்து கூடுதல் விவரம் அறிய 0413-2207262 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.