Enable Javscript for better performance
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றத்துக்கு ஆளுநர் ஒப்புதல்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றத்துக்கு ஆளுநர் ஒப்புதல்

    By  புதுச்சேரி,  |   Published on : 13th June 2018 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றத்துக்கு, துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளித்தார்.
     புதுச்சேரி ஆட்சியர் சத்தியேந்திர சிங் துர்சாவத் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருகிறார். கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு இவரை புதுதில்லிக்கு இடமாற்றம் செய்தது. அப்போது ஏப்.1-ஆம் தேதிக்குள் பணியில் சேர அறிவுறுத்தியது.
     ஆனால், தில்லிக்குச் செல்லாமல் புதுச்சேரி மாவட்ட ஆட்சியராகவே அவர் பணியாற்றி வருகிறார். இது குறித்து ஆளுநர் கிரண் பேடி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
     இந்த நிலையில், மத்திய அரசு, மாவட்ட ஆட்சியர் சத்தியேந்திர சிங் துர்சாவத்துக்கு ஜூன் 5-ஆம் தேதிக்குள் தில்லியில் பணியில் சேர வேண்டும், இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
     இதையடுத்து, புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, மாவட்ட ஆட்சியர் சத்யேந்திர சிங் துர்சாவத்தை புதுச்சேரியில் இருந்து விடுவிப்பதற்கான கோப்பை தயாரித்து ஆளுநருக்கு அனுப்பியது. இந்த கோப்புக்கு ஆளுநர் கிரண் பேடி கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார்.
     அதுபோல, பெங்களூரில் உள்ள அக்ஷய பாத்திர அறக்கட்டளை புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவை தரம் உயர்த்தி வழங்குவதற்காக மாநில அரசுடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கும் அனுமதி அளித்துள்ளார்.
     மேலும், கிராமப்புற மக்களுக்கு மின்சார வசதி செய்து கொடுக்கும் தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா திட்டத்தை செயல்படுத்த ரூ.20.15 கோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
     மேலும், முதியோர் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு மே மாத உதவித்தொகை வழங்க ரூ.27.84 கோடியை வழங்க ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.
     இது தொடர்பான அறிவிப்பு ஆளுநர் மாளிகை இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai