Enable Javscript for better performance
மணல் கடத்தலுக்கு உடந்தை: 4 போலீஸார் பணியிட மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    மணல் கடத்தலுக்கு உடந்தை: 4 போலீஸார் பணியிட மாற்றம்

    By  புதுச்சேரி  |   Published on : 13th June 2018 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக 4 போலீஸார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
     புதுவை மாநிலம், வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்தல் சம்பவங்களால் அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் மணல் கடத்தலை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருப்பினும், போலீஸாரின் உடந்தையோடு சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக புகார்கள் காவல் தலைமையகத்துக்கு வந்தன.
     இதையடுத்து சில நாள்களுக்கு முன்பு ஐஜி சுரேந்தர் யாதவ் வில்லியனூர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தினார்.
     அப்போது, அங்கு பணியாற்றிய உதவி துணை ஆய்வாளர் பக்தவச்சலம் மற்றும் போலீஸார் அர்ச்சுனன், செந்தமிழ்செல்வன், ராஜன் ஆகியோர் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.
     இதையடுத்து அவர்கள் 4 பேர் மீது நடவடிக்கை எடுத்து மாநில காவல் இயக்குநர் சுனில்குமார் கெüதமுக்கு, ஐஜி சுரேந்தர் யாதவ் பரிந்துரை செய்தார்.
     இந்த நிலையில் உதவி துணை ஆய்வாளர் உள்பட 4 பேரையும் தலைமையிடத்துக்கு இடமாற்றம் செய்து காவல் இயக்குநர் சுனில்குமார் கெüதம் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai