Enable Javscript for better performance
மாணவர்களுக்கு மனித வள மேம்பாட்டுப் பயிற்சி: அரசு, தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்களுக்கு மனித வள மேம்பாட்டுப் பயிற்சி: அரசு, தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்

    By புதுச்சேரி,  |   Published on : 13th June 2018 07:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக மனிதவள மேம்பாடுப் பயிற்சி அளிக்க விரும்பும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என்று அரிமதி தென்னகனார் இலக்கிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
    இது தொடர்பாக அறக்கட்டளை நிறுவனர் அரிமதி இளம்பரிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
    அரிமதி தென்னகனார் இலக்கிய அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 
    நிகழ் கல்வியாண்டில் இந்தப் பயிற்சி முகாம் ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லுôரிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
    நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது, எதிர்மறைச் சிந்தனைகளை களையும் வழிமுறைகள், பேச்சாற்றல் கலை, 
    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளை தன்னம்பிக்கையோடு எழுதும் திறன்களை வளர்த்துக் கொள்வது, முடிவெடுக்கும் ஆற்றல், அளவுக்கு அதிகமான செல்லிடப்பேசி பழக்கத்தில் உளவியல் ரீதியாக மனதில் ஏற்படும் மாற்றங்கள், தோல்விகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனோபாவங்களை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள், கூடுதலாக திறன்களை வளர்த்துக் கொள்ளுதல், சுயக்கட்டுப்பாடு, வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்திக் கொள்வது, தலைவர்களுக்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்த ஆளுமைப் பயிற்சி நடைபெறும். 
    மூன்று மணி நேரம் நடத்தப்படும் இந்தப் பயிற்சி முகாமை தங்களது பள்ளிகளில் நடத்த விரும்பும் தனியார் மற்றும் அரசுப் பள்ளி , கல்லூரி முதல்வர்களும், தலைமையாசிரியர்களும் தங்களது விருப்பத்தை அரிமதி தென்னகனார் இலக்கிய அறக்கட்டளை, 72 முதல் குறுக்குத் தெரு, ஆனந்தரங்கப் பிள்ளை நகர், புதுச்சேரி} 605 008 என்ற முகவரியிலோ அல்லது arimathilamparithi@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
    தமிழகம் மற்றும் புதுவையின் கிராமப்புறங்களில் இயங்கும் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லுôரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai