Enable Javscript for better performance
அமைச்சர் நமச்சிவாயம் ரமலான் வாழ்த்து- Dinamani

சுடச்சுட

    

    புதுவை மாநில இஸ்லாமியர்களுக்கு பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
     அவரது வாழ்த்துச் செய்தி:
     இன்ஷா அல்லா போதித்த தத்துவங்களை பின்பற்றி மனப்பூர்வமாக தர்மம் செய்யும் புனித பண்பினை அனைவருக்கும் கற்றுத் தருகின்ற உன்னத திருநாளாக ரம்ஜான் பண்டிகை திகழ்கிறது. தூய மனதுடன் நோன்பிருந்து தெளிந்த சிந்தையுடன் தினம்தோறும் அல்லாஹ்வை வணங்கி திக்கற்ற ஏழை, எளியவர்கள் பசிபோக்க, அவர்களின் வறுமை நீங்க தங்கள் உழைப்பின் மூலம் கிடைத்த செல்வத்தை பகிர்ந்தளிக்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை இந்நன்னாளில் தெரிவித்துக் கொள்கிறேன்.
     ஈகை பெருநாளாம் ரமலான் திருநாளில் அனைவரின் வாழ்விலும் இன்பம் பெருகவும், செல்வம் தழைத்து ஓங்கவும் எல்லாம் வல்ல இறைவனை மனதார வேண்டுகிறேன்.
     இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் நமச்சிவாயம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai