Enable Javscript for better performance
உழவர்கரை நகராட்சியில் தனிநபர் கடன் பெறும் திட்ட கலந்தாய்வு: 3 எம்எல்ஏக்கள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    உழவர்கரை நகராட்சியில் தனிநபர் கடன் பெறும் திட்ட கலந்தாய்வு: 3 எம்எல்ஏக்கள் பங்கேற்பு

    By  புதுச்சேரி,  |   Published on : 14th June 2018 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உழவர்கரை நகராட்சி அலுவலகத்தில் தனி நபர் கடனுதவி பெறும் திட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.
     புதுவையில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் தனிநபர் கடன் வழங்குவதற்கான கூட்டம் கடந்த ஜூன்
     4-ஆம் தேதி முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது, முதல்வர் நாராயணசாமி அந்தந்த நகராட்சிக்கு உள்பட்ட எம்எல்ஏக்கள் மற்றும் வங்கி மேலாளர்களுடன் கூட்டம் நடத்துமாறு உத்தரவிட்டார்.
     அதன்படி, உழவர்கரை நகராட்சி அலுவலகத்தில் தனி நபர் கடன் விண்ணப்பங்கள் மூலம் கடன் பெறுவது தொடர்பான விளக்கங்களை பெறவும், இத்திட்டத்தை செம்மையாக செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் வழங்கவும் நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
     இதில் எம்எல்ஏக்கள் அசோக் ஆனந்த், ஜெயபால், எம்.என்.ஆர்.பாலன், பேரவை துணைத் தலைவரின் தனிச் செயலர் சந்திரகுமார், முன்னோடி வங்கி மேலளார் சந்திரசேகர், உதவித் திட்ட அதிகாரி கருணாநிதி மற்றும் உழவர்கரை நகராட்சி பகுதிக்கு உள்பட்ட பல்வேறு வங்கிகளின் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
     கூட்டத்தில், தனி நபர் கடன் வழங்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, எம்எல்ஏக்கள் மூலம் தனி நபர் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். அதனை பயனாளிகள் நிறைவு செய்து, அதனுடன் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக முதல் பக்கம், வருமான வரிச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை இணைத்து வழங்க வேண்டும்.
     பின்னர், பயனாளிகள் பிரித்து அந்தந்த பகுதியில் உள்ள வங்கிகளின் மூலம் கடனுதவி வழங்க நடவடிக்கை எடுப்போம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, எம்எல்ஏக்கள் தகுதி வாய்ந்த பயனாளிகளை விரைவாக தேர்வு செய்து திட்டத்தின் பலன்கள் மக்களுக்கு முறையாக சென்றடைய ஆலோசனை வழங்கினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai