Enable Javscript for better performance
ஏடிஎம் பண மோசடி வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஏடிஎம் பண மோசடி வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றக் கோரிக்கை

    By  புதுச்சேரி,  |   Published on : 14th June 2018 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏடிஎம் பண மோசடி வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என்று ஆளுநர் கிரண் பேடியிடம் புதுச்சேரி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளித்துள்ளது.
     அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் முருகானந்தம் புதன்கிழமை அளித்துள்ள மனு விவரம்:
     மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பிரதமர் மோடி நாட்டில் ஊழலை ஒழிக்க பணப் பரிவர்த்தனை அனைத்தையும் எண்மமயமாக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.
     இந்த நிலையில் பிரதமரின் கனவை சிதைக்கும் வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போலி ஏடிஎம் அட்டைகளை தயாரித்து, பிறரது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்யும் கும்பல் புதுச்சேரியில் இருப்பதாக காவல்துறையால் தெரிவிக்கப்பட்டது. இதில் மருத்துவர், பொறியாளர், அரசியல்வாதிகள் இருப்பதாக கூறப்பட்டு கைதும் செய்யப்பட்டனர்.
     மேலும் முக்கிய எதிரியான சந்துருஜி இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அவரைப் பிடித்தால் இச்சம்பவத்தின் முழு விவரங்களும் தெரியவரும் எனக் கூறப்பட்டது.
     இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த வழக்கில் முக்கிய எதிரியான சந்துருஜி கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. அன்றைய தினம் மாலையே சமூக வலைதளத்தில் சந்துருஜி ஒரு விடியோவை வெளியிட்டு இருந்தார். இதனால் சந்துருஜி கைது செய்யப்பட்டாரா? இல்லையா? என்ற சந்தேகம் மக்கள் அனைவரின் மனதிலும் ஏற்பட்டுள்ளது.
     மேலும், இந்த மோசடி வெளியானதில் இருந்து புதுச்சேரி மக்கள் பணப் பரிமாற்றத்துக்கு எண்மமயத்துக்கு மாறி வந்ததை நிறுத்தி, ரொக்கத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
     எனவே, மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டியது புதுவை காவல்துறையின் கடமை. எனவே, புதுவை ஆளுநர் இவ்விஷயத்தில் தலையிட்டு பிரதமரின் எண்ம மயத் திட்டம் புதுச்சேரியில் தீவிரமாக அமலாகும் வகையில் ஏடிஎம் பண மோசடி வழக்கில் முழுத் தகவலையும் வெளியிட புதுவை காவல் இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்.
     ஒரு வார காலத்துக்குள் அறிக்கையை புதுவை காவல்துறை வெளியிடவில்லை என்றால் இந்த வழக்கை (என்.ஐ.ஏ) தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai