Enable Javscript for better performance
கல்வித் துறையில் புகார்களைப் பெற கட்செவி அஞ்சல் வசதி- Dinamani

சுடச்சுட

    

    கல்வித் துறையில் புகார்களைப் பெற கட்செவி அஞ்சல் வசதி

    By  புதுச்சேரி,  |   Published on : 14th June 2018 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கட்செவி அஞ்சலில் வரும் உத்தரவுகளை செயல்படுத்தக் கூடாது என்ற முதல்வரின் எச்சரிக்கையையும் மீறி, துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் கட்செவி அஞ்சல் உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் செயல்படுத்தியதால் அரசு நிர்வாகத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
     புதுவை கல்வித் துறையில் புகார்களை பெற கட்செவி அஞ்சல் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
     மாநிலத்தில் ஆளுநர், முதல்வர் இடையே அதிகார போட்டி தொடர்ந்து நிலவி வருகிறது. ஆளுநர் கட்செவி அஞ்சலில் அடிக்கடி உத்தரவு போடுவதால் அதை அதிகாரிகள் உடனுக்குடன் நிறைவேற்றி வருகின்றனர். இந்த நிலையில், கட்செவி அஞ்சல் உள்பட எந்த சமூக ஊடகமும் புதுவை அரசால் அங்கீகரிக்கப்பட்டது அல்ல என்றும், கட்செவி அஞ்சலில் ஆளுநர் உள்பட யார் உத்தரவு போட்டாலும் அதை அதிகாரிகள் செயல்படுத்தக்கூடாது என்றும், செயல்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் நாராயணசாமி திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தார். புதுச்சேரி கட்டுப்பாட்டு அறைக்கு தனியார் பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படாமல் அதிக நன்கொடை கேட்டு அலைக்கழிக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையறிந்த ஆளுநர் கிரண் பேடி கல்வித் துறையிலேயே தனிக் கட்டுப்பாட்டு அறை தொடங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து கல்வித் துறையில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு அதற்காக 0413-2207262 என்ற தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
     மேலும், கட்செவி அஞ்சல் மூலம் புகார்களை தெரிவிக்க 97866 68661என்ற செல்லிடப்பேசி எண்ணும் உருவாக்கப்பட்டுள்ளது.
     புகார்களை பட்டதாரி ஆசிரியர் கோபிகிருஷ்ணன் பெறுவார் என்று ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் புதன்கிழமை காலை அறிக்கை வெளியிட்டார்.
     முதல்வரின் எச்சரிக்கையும் மீறி கல்வித் துறையில் புகார்களை பெற கட்செவி அஞ்சல் வசதி செய்யப்பட்டுள்ளது.
     இதன் மூலம் ஆளுநர் கிரண் பேடி புதுவை ஆட்சி நிர்வாகத்தில் தனக்குத்தான் அதிகபட்ச அதிகாரம் உள்ளது என்பதை சொல்லாமல் செயலில் காட்டியுள்ளார்.
     இந்த நடவடிக்கையை முதல்வர் நாராயணசாமி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என அதிகாரிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai