Enable Javscript for better performance
குடிமைப் பணி தேர்வுக்கு இலவசப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    எஸ்.சகாயம் ஐஏஎஸ் வழிகாட்டுதல்படி நடக்கும் மக்கள் பாதை அமைப்பின் கீழ் இயங்கும் நேர்மை அகாதெமி சார்பில் குடிமைப் பணி தேர்வுக்கான இலவசப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
     இப்பயிற்சி பெற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.
     நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் உழவர்கரையில் உள்ள நேர்மை அகாதெமியில் வழங்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வழங்கும் பணியை கடலோர காவல்படை கமாண்டர் எம்.ரமேஷ் திங்கள்கிழமை தொடக்கிவைத்தார். மேலும், 2017-ஆம் ஆண்டு பயிற்சி முடித்தவர்களுடனும் கமாண்டர் ரமேஷ் கலந்துரையாடினார்.
     நுழைவுத் தேர்வு ஜூன் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை பெற நேர்மை அகாதெமி, எண் 156/3, முதல் தளம், நண்பர்கள் நகர், உழவர்கரை, புதுச்சேரி-605010 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மக்கள் பாதை அமைப்பினர் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai