Enable Javscript for better performance
மீன்பிடி தடைக் காலம் இன்றுடன் நிறைவு: கடலுக்குள் செல்ல தயாராகும் மீனவர்கள்- Dinamani

சுடச்சுட

    

    மீன்பிடி தடைக் காலம் இன்றுடன் நிறைவு: கடலுக்குள் செல்ல தயாராகும் மீனவர்கள்

    By  புதுச்சேரி,  |   Published on : 14th June 2018 09:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    boat1

    புதுச்சேரியில் மீன்பிடி தடைக் காலம் இன்று முடிவடைவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
     தமிழகம் மற்றும் புதுவையில் கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்.15 முதல் மே 29-ஆம் தேதி வரை 45 நாள்கள் மீன்பிடி தடைக் காலமாக இருந்து வந்தது.
     இந்த தடைக் காலத்தின் போது மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதனிடையே கடந்த ஆண்டு முதல் இந்த 45 நாள்கள் தடைக்காலம் என்பது 61 நாள்களாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தடைக்காலம் வியாழக்கிழமையுடன் முடிவடைகிறது. ஆனால், வியாழக்கிழமை நாள் நன்றாக இல்லை என்பதாலும், புதன்கிழமை அமாவாசை என்பதாலும் பெரும்பாலான மீனவர்கள் புதன்கிழமையே கடலுக்குச் சென்றனர்.
     இதற்காக மீனவர்கள் புதன்கிழமை காலை சிறப்பு பூஜைகள் செய்து கடலில் படகில் வெள்ளோட்டம் பார்த்தனர்.
     வெள்ளோட்டம் மட்டுமே பார்த்துவிட்டு திரும்பிவிட்டனர். ஆனால், மீன் பிடிக்கும் பணியில் ஈடுபடவில்லை. வெள்ளிக்கிழமை முதல் மீன் பிடிக்கச் செல்ல முடிவு செய்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai