Enable Javscript for better performance
ரயில் முன் பாய்ந்து வெல்டர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி அருகே குடும்பத் தகராறு காரணமாக, வெல்டர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
     புதுவை மாநிலம், வில்லியனூர் தொண்டமாநத்தம் எழில்நகர் பகுதியைச் சேர்ந்தவர் எழிலன் (45). வெல்டர். இவரது மனைவி வள்ளி (எ) சரசு. இவர்களுக்கு தர்ஷினி(13) என்ற மகளும், குமார் (7) என்ற மகனும் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்தாகக் கூறப்படுகிறது.
     இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த எழிலன், சேந்தநத்தம் பாண்டியன் நகர் அருகே புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
     தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸார், எழிலனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புதுச்சேரி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து
     விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai