Enable Javscript for better performance
ஆளுநரிடம் குவியும் புகார்கள்: மதுக் கடைகளுக்கு நோட்டீஸ், கழிவுநீர் லாரிகளுக்கு கட்டுப்பாடு- Dinamani

சுடச்சுட

    

    ஆளுநரிடம் குவியும் புகார்கள்: மதுக் கடைகளுக்கு நோட்டீஸ், கழிவுநீர் லாரிகளுக்கு கட்டுப்பாடு

    By  புதுச்சேரி,  |   Published on : 15th June 2018 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை ஆளுநரிடம் தொடர்ந்து புகார்கள் குவிந்ததையடுத்து, மதுக்கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கழிவுநீரை உறிஞ்சும் லாரிகளுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
     புதுச்சேரி சோரியாங்குப்பம் கிராமத்தில் இயங்கி வரும் மதுபான கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தவும், குப்பைகள் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க பலமுறை கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், மதுபான கடைகள் அதைப் பின்பற்ற வில்லை.
     இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனவே, குப்பைகளைச் சரிவர அகற்றாததால் மதுபானக் கடைகளின் வணிக உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுகுறித்து இரு நாள்களுக்குள் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது. அதேபோல, கழிவுநீர் தொட்டிகளை தூய்மை செய்யும் வாகனங்கள் அந்தக் கழிவுகளை நீர்நிலைகளில் திறந்து விடுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஆளுநர் கிரண்பேடி உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, புகார் வந்த பகுதிகளில் ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
     இதையடுத்து, கழிவுநீர் லாரிகள் சேகரிக்கும் கழிவுகளை வாய்க்கால்களிலும், ஆறுகளிலும், பொது இடங்களிலும் கொட்டக் கூடாது.
     கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் வாகனங்கள் வைத்திருப்போர் சம்பந்தப்பட்ட உள்ளூர் அமைப்புகளில் பதிவு செய்ய வேண்டும். வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில்தான் கழிவுகளை அளிக்கவேண்டும். இதுதொடர்பாக முழு அறிக்கையை இரு நாள்களில் நகராட்சி, கொம்யூன் ஆணையர்கள் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai