Enable Javscript for better performance
உலக ரத்த தான தினத்தையொட்டிபுதுவை ஆளுநர் ரத்த தானம்- Dinamani

சுடச்சுட

    

    உலக ரத்த தான தினத்தையொட்டிபுதுவை ஆளுநர் ரத்த தானம்

    By  புதுச்சேரி,  |   Published on : 15th June 2018 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலக ரத்த தான தினத்தையொட்டி, புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வியாழக்கிழமை ரத்த தானம் செய்தார்.
     புதுவை ஆளுநர் மாளிகையில் உலக ரத்த தான விழா வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த முகாமை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் நடத்தினர். இதில் பொதுமக்கள் ஆர்வமாகப் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடியும் ரத்த தானம் செய்தார்.
     பின்னர், ஆளுநர் கிரண் பேடி கூறியதாதுத: ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள புற்று நோயாளிகளுக்கு அதிக அளவில் ரத்தம் தேவைப்படுகிறது.
     எனவே அனைவரும் ரத்த தானம் செய்ய முன் வரவேண்டும். ஒரு நபர் 350 மி.லி. (ஒரு அலகு) ரத்தம் வழங்க முடியும். இதுவரை ஜிப்மர் ரத்த தான முகாம்கள் மூலம் இதுவரை 10 ஆயிரம் அலகு ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai