Enable Javscript for better performance
எதிர்கட்சித் தலைவர் முகவரிக்குச் செல்லும் புதுவை முதல்வரின் கடிதங்கள்- Dinamani

சுடச்சுட

    

    எதிர்கட்சித் தலைவர் முகவரிக்குச் செல்லும் புதுவை முதல்வரின் கடிதங்கள்

    By    புதுச்சேரி,  |   Published on : 15th June 2018 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pondy

    புதுவை முதல்வருக்கு வரும் மத்திய அரசின் கடிதங்கள் முகவரி மாறி, எதிர்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி வீட்டுக்கு போவதாக புகார் எழுந்துள்ளது.
     கடந்த 2 ஆண்டுகளாக முதல்வர் அலுவலகமாக எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமியின் வீட்டு முகவரியை குறிப்பிட்டு மத்திய அரசிலிருந்து தொடர்ந்து கடிதம் வந்தபடி உள்ளதாம். மத்திய அரசுக்கு முதல்வர் நாராயணசாமியின் அலுவலகத்தில் இருந்து இதுதொடர்பாக கடிதம் அனுப்பியும் இந்த நிலை தொடர்கிறதாம்.
     மத்திய அரசின் சார்பு செயலர் சதீஷ்குமார் சிங் கையெழுத்திட்டுள்ள ஒரு கடிதம் கடந்த மே மாதம் தலைமைச் செயலருக்கும், அதன் நகல் ஆளுநரின் செயலருக்கும், முதல்வரின் தனிச் செயலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
     அந்தக் கடிதத்தில் முதல்வரின் அலுவலக முகவரியாக எண். 8, விநாயகர் கோயில் தெரு, திலாசுபேட்டை, புதுச்சேரி-9 என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த முகவரி எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமியின் வீட்டு முகவரியாகும்.
     இதையடுத்து முதல்வர் அலுவலகத்தில் இருந்து மத்திய உள்துறைக்கு வீட்டு முகவரி தவறாக குறிப்பிடப்படுவதாக கடிதம் அனுப்பப்பட்டது.
     இந்த நிலையில், நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் கானட் ஜூன் 13-ஆம் தேதி அனுப்பிய கடிதமும், முதல்வர் அலுவலகம் என எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமியின் வீடான திலாசுபேட் முகவரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
     இதுகுறித்து அரசு வட்டாரங்களில் விசாரித்த போது, மத்திய அரசிடமிருந்து வரும் பல கடிதங்கள் இதுபோன்றே முகவரி மாறி வருகின்றன. முதல்வர் நாராயணசாமியின் அலுவலகம் சட்டப்பேரவை வளாகத்தில்தான் உள்ளது. முதல்வர் நாராயணசாமியின் வீடு எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ளது. ஆனாலும், மத்திய அரசிடமிருந்து வரும் கடிதங்கள் முகவரி மாறியே வருகின்றன என்றனர்.
     இதுதொடர்பாக முதல்வர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, முதல்வர் அலுவலகம் வீட்டு முகவரியாக இருக்காது. முகவரியில், சட்டப்பேரவையைதான் குறிப்பிட்டிருக்க வேண்டும். முகவரி தவறாக இருப்பது குறித்து ஏற்கெனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai