Enable Javscript for better performance
சாகித்ய அகாதெமி சார்பில் புத்தகக் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    சாகித்ய அகாதெமி சார்பில் புத்தகக் கண்காட்சி

    By  புதுச்சேரி,  |   Published on : 15th June 2018 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாகித்ய அகாதெமி சார்பில் புதுச்சேரியில் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை மாலை தொடங்கியது. இந்தக் கண்காட்சியை புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தொடக்கிவைத்தார்.
     விழாவுக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து தலைமை வகித்தார். கண்காட்சியில் கலை, இலக்கியம், வரலாறு, அரசியல், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நூல்கள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியின் போது, நாள்தோறும் மாலை 5.30 மணிக்கு எழுத்தாளர்கள் தொடர்பான ஆவணப் படங்கள் திரையிடப்படுகின்றன.
     அந்த வகையில், வியாழக்கிழமை மாலை சா.கந்தசாமி இயக்கிய ஜெயகாந்தன் (தமிழ்) ஆவணவப் படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (ஜூன் 15), கிருஷ்ணா மசடி இயக்கிய யு.ஆர்.ஆனந்தமூர்த்தி (கன்னடம்) ஆவணப் படமும், சனிக்கிழமை (ஜூன் 16) ஹரிகுமார் இயக்கிய எம்.டி.வாசுதேவன் நாயர் ஆவணப் படமும், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 17) குரும்பராவ் இயக்கிய காளீபட்னம் ராமாராவ் (தெலுங்கு) ஆவணப் படமும் திரையிடப்படவுள்ளன. இந்தக் கண்காட்சி வருகிற ஜூன் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai