Enable Javscript for better performance
ஜிப்மர் செவிலியர் அதிகாரிகள், எல்டிசி பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    ஜிப்மர் செவிலியர் அதிகாரிகள், எல்டிசி பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

    By புதுச்சேரி,  |   Published on : 15th June 2018 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி ஜிப்மர் செவிலியர் அதிகாரிகள், எல்டிசி பணிகளுக்கான இணையதளத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை மாலை வெளியாகின.
    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர் அதிகாரிகள், இளங்கலை எழுத்தர் (எல்டிசி) பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு இந்தியா முழுவதும் உள்ள 59 மையங்களில் முதன் முறையாக ஆன்லைன் மூலம் தேர்வு கடந்த 10}ஆம் தேதி நடைபெற்றது.
    ஜிப்மரில் உள்ள 24 எல்டிசி பணியிடங்களுக்கு 4,914 பேரும், 91 செவிலியர் அதிகாரிகள் பணியிடங்களுக்கு 12,972 பேரும் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் www.jipmer.puducherry.gov.in / www.jipmer.edu.in என்ற ஜிப்மர் இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியாகின.
    எல்டிசி பணியிடங்களுக்கான ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் திறன் சோதனைக்கான (Skill Test) தேர்வு 1:5 விகிதாசாரப்படி ஜூலை 5-ஆம் தேதி நடைபெறும். செவிலியர் அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு 1:2 என்ற விகிதாசாரப்படி ஜூலை 6-ஆம் தேதி நடைபெறும்.
    சோதனை திறன் தேர்வு மற்றும் விண்ணப்பதாரர்கள் எடுத்தவர வேண்டிய சான்றிதழ்கள் குறித்த விரிவான விவரம் ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai