Enable Javscript for better performance
பாரதிய தலித் சாகித்ய அகாதெமி சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பாரதிய தலித் சாகித்ய அகாதெமி சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்

    By  புதுச்சேரி,  |   Published on : 15th June 2018 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாரதிய தலித் சாகித்ய அகாதெமியின் தென்னிந்திய மாநிலங்களின் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 16) புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மணிமண்டப அரங்கில் நடைபெற உள்ளது.
     இந்தக் கூட்டத்துக்கு புதுச்சேரி, ஏனாம் பிராந்தியங்களைச் சேர்ந்த சமூக சேவகரும், பாரதிய தலித் சாகித்ய அகாதெமியின் தென்னிந்திய மாநிலங்களின் தலைவருமான பொன்னுகுமட்லா விஷ்ணுமூர்த்தி தலைமை வகிக்கிறார். மேலும், பாரதிய தலித் சாகித்ய அகாதெமியின் ஆந்திர மாநிலத் தலைவர் தனசேகர், தெலுங்கானா மாநிலத் தலைவர் ஜிதெந்திர மானு, கர்நாடக மாநிலத் தலைவர் செல்வராஜூ, கேரள மாநிலத் தலைவர் துட்டபள்ளி பாலகிருஷ்ணன், தமிழ்நாடு மாநிலத் தலைவர் கோபி சந்திரன், புதுவை பிரதேச தலைவர் வாசுகி ஜெயராமன் உள்பட பலர் கல ந்து கொள்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai