Enable Javscript for better performance
புதுவை டிஜிபி தில்லிக்கு பணியிடமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    புதுவை மாநில காவல் துறை இயக்குநர் சுனில்குமார் கெüதமை மத்திய அரசு அதிரடியாக தில்லிக்கு பணியிட மாற்றம் செய்துள்ளது. இதையடுத்து, புதுவை மாநில காவல் துறை இயக்குநராக சிவகாமி சுந்தரி நந்தா பொறுப்பேற்க உள்ளார். புதுவை மாநில டி.ஜி.பி.யாக சுனில்குமார் கெüதம் செயல்பட்டு வந்தார். அவரை தில்லிக்கு பணியிட மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. அவருக்குப் பதிலாக தில்லி காவல் துறையில் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ். அதிகாரி சிவகாமி சுந்தரி நந்தா புதுவை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இவர் புதுவையில் நியமிக்கப்படும் முதல் பெண் டி.ஜி.பி. ஆவார்.
     புதுவையில் போலி ஏ.டி.எம். அட்டைகளைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் பண மோசடி செய்யப்பட்ட வழக்கில் முக்கிய எதிரியை காவல் துறை கைது செய்யாமல் மெத்தனம் காட்டி வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தனர். அண்மைக் காலமாக புதுவையில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை எனவும் குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த நிலையில், டி.ஜி.பி. சுனில்குமார் கெüதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai