Enable Javscript for better performance
புதுவை வக்பு வாரியம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    புதுவை வக்பு வாரியம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

    By  புதுச்சேரி,  |   Published on : 15th June 2018 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் வக்பு வாரியம் சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்றார்.
     புதுவை வக்பு வாரியம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வக்பு வாரியம் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     சென்னை உயர் நீதிமன்றம் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. இதுபோன்ற வழக்கில்தான் புதுவை பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது என்ற உத்தரவுக்கு நீதிபதிகள் செல்லும் என்று தீர்ப்பு அளித்தனர். இவ்வாறு முன்னுக்குப்பின் முரணான தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
     புதுவை பேரவைத் தலைவர் உத்தரவுக்கு எதிரான தீர்ப்பை ரத்து செய்ய கோரி, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
     இந்த மாறுபட்ட தீர்ப்பால் 18 எம்.எல்.ஏ.க்களும் திரிசங்கு நிலையில் உள்ளனர் என்றார் அவர்.
     இப்தார் திறப்பு நிகழ்ச்சியில், பொதுப் பணித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், வக்பு வாரியத் துறை அமைச்சர் ஷாஜகான், அதிமுக எம்.எல்.ஏ. ஏ.அன்பழகன், திமுக வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai