Enable Javscript for better performance
மணல் திருட்டு புகாரில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர் ராஜிநாமா கடிதம் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மணல் திருட்டு புகாரில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர் ராஜிநாமா கடிதம் அளிப்பு

    By  புதுச்சேரி,  |   Published on : 15th June 2018 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மணல் திருட்டுக்கு உடந்தையாக இருந்த புகாரில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட 4 காவலர்களில் ஒருவர் திடீரென ராஜிநாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
     புதுவை சங்கராபரணி ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டைத் தடுக்காமல், அதற்கு உடந்தையாக இருந்ததாக எழுந்த புகாரில் வில்லியனூர் காவல் நிலைய உதவி துணை ஆய்வாளர் பக்தவச்சலம், காவலர்கள் அர்ஜுனன், செந்தமிழ், ராஜா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
     இதையடுத்து, புகாரில் சிக்கிய காவலர்களிடம் காவல் துறை இயக்குநர் சுனில்குமார் கெüதம் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது, அவர்கள் அளித்த பதில் திருப்தியளிக்காததால் 4 பேரும் காவல் தலைமையகத்துக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
     இதனிடையே காவலர் அர்ஜுனன் காவல் துறை தலைமையக காவல் கண்காணிப்பாளருக்கு புதன்கிழமை அனுப்பிய கடிதத்தில் தன்னுடைய பணியை ராஜிநாமா செய்வதாக குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், அவரது ராஜிநாமாவை காவல் தலைமையகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அர்ஜுனனுக்கு டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டு, விளக்கமளிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai