Enable Javscript for better performance
முதல்வருடன், மத்திய அரசின் உயரதிகாரி ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    முதல்வருடன், மத்திய அரசின் உயரதிகாரி ஆலோசனை

    By  புதுச்சேரி,  |   Published on : 15th June 2018 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை முதல்வர் வே.நாராயணசாமியுடன் மத்திய கால்நடை பராமரிப்புத் துறைச் செயலர் தருண் ஸ்ரீதர் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
     மத்திய அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அந்தத் திட்டங்களை புதுவையில் அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு மத்திய கால்நடை பராமரிப்புத் துறைச் செயலர் தருண் ஸ்ரீதருக்கு முதல்வர் நாராயணசாமி அழைப்பு விடுத்து இருந்தார்.
     இந்த அழைப்பை ஏற்று புதுச்சேரிக்கு வியாழக்கிழமை வந்திருந்த மத்திய கால்நடை பராமரிப்புத் துறைச் செயலர் தருண் ஸ்ரீதர் முதல்வர் நாராயணசாமியை புதுவை சட்டப்பேரவையில் சந்தித்துப் பேசினார். பின்னர், முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பொதுப் பணி, கால்நடைத் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, செயலர்கள் சுந்தரவடிவேலு, பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
     இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு என்னென்ன திட்டங்களை பால் உற்பத்திக்காக செயல்படுத்தி வருகிறது என்பது குறித்து மத்திய கால்நடை பராமரிப்புத் துறைச் செயலர் விளக்கினார்.
     கூட்ட முடிவில் முதல்வர் நாராயணசாமி மத்திய அரசின் செயலர் கூறிய திட்டங்களில் எவற்றை எல்லாம் புதுவையில் அமல்படுத்த முடியும் என்பதை ஆய்வு செய்து, அறிக்கையாக தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பித்து பெற நடவடிக்கை எடுக்கும்படி புதுவை அரசின் செயலர்களுக்கு உத்தரவிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai