Enable Javscript for better performance
ரமலான்: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து- Dinamani

சுடச்சுட

    

    ரமலான்: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

    By  புதுச்சேரி,  |   Published on : 15th June 2018 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரமலான் பண்டிகையை முன்னிட்டு, புதுவையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
     என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி: புதுவையில் வாழும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் இனிய புனித ரமலான் வாழ்த்துகள். இந்தத் திருநாளில் அன்பையும், நல்லறத்தையும், ஈகைப் பண்பையும் தொடர்ந்து பேண நாம் உறுதியேற்க வேண்டும். சகோதரத்துவத்துடன் அனைவரிடமும் அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவரும் இறைவன் திருவருள் பெற்று எல்லா நலனும், வளமும் பெற வேண்டுகிறேன்.
     இரா.சிவா எம்.எல்.ஏ.: தனி மனித ஒழுக்கம், எளியோர், வலியோர் பேதமின்றி அனைவரையும் நேசிக்க வேண்டும் என்கிற வாழ்வியல் நெறிகளை இந்த மண்ணுலகுக்கு வழங்கிய மகான்களில் ஒருவர்தான் நபிகள் நாயகம்.
     அவரது போதனைகளை பின்பற்றி வாழும் இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் மாதம் முழுவதும் பசி, தாகம், இச்சைகளைக் கட்டுப்படுத்தி நோன்பு இருந்து இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த ஈகைப் பெருநாளை கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு என வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
     இரா.ராதாகிருஷ்ணன் எம்.பி. : இஸ்லாம் சமுதாயத்துக்கு மட்டுமல்லாமல், மனித சமுதாயம் அனைத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறியைப் போதித்தவர் நபிகள் பெருமான்.
     நோன்பிருப்பதன் மூலம் பொறுப்புகளை சுமக்கும் ஆற்றலையும், இறைவனை சிந்திப்பதற்கான சந்தர்ப்பத்தையும், கட்டுப்படுத்திக் கொள்கின்ற சக்தியையும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் பெறுகின்றனர்.
     இந்தத் திருநாளில் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, இரக்கம், கருணை, ஒற்றுமை உணர்வு, சகோதரத்துவம் போன்ற நற்பண்புகள் மேலோங்க உறுதி ஏற்போம்.
     புதுவை சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் உள்ளிட்ட தலைவர்களும் புனித ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai