Enable Javscript for better performance
ரமலான்: புதுவை ஆளுநர், முதல்வர், பேரவைத் தலைவர் வாழ்த்து- Dinamani

சுடச்சுட

    

    ரமலான்: புதுவை ஆளுநர், முதல்வர், பேரவைத் தலைவர் வாழ்த்து

    By  புதுச்சேரி,  |   Published on : 15th June 2018 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புனித ரமலான் பண்டிகையொட்டி, புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வே.நாராயணசாமி, சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
     புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி: உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதரர்களின் புகழ்பெற்ற விழாவாக புனித ரமலான் பண்டிகை உள்ளது. புனித மாதமான ரமலான் மாதத்தில் அறநெறிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு, நல்லெண்ணம், சுய மனநிறைவு , தேவைப்படுபவர்களுக்கு உதவுதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஒரு தனிப்பட்ட விழாவாக உள்ளது. இந்த இனிய நாளில் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும், புதுவை மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான ரமலான் வாழ்த்துகள்.
     புதுவை முதல்வர் வே.நாராயணசாமி: உலக மக்களின் துயர்துடைக்கவும், நல்வாழ்வு வாழவும் ஒரு அற்புதமான மார்க்கத்தை உலகுக்கு அளித்தவர் நபிகள் நாயகம்.
     ஈகையின் மகத்துவத்தை உணர்த்தும் திருநாளான ரமலான், இந்திய மக்களின் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
     புனித ரமலான் மாதத்தில் கடுமையான நோன்பிருந்து இறைவனை தொழும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இறைவனின் பரிபூரண ஆசி கிட்டும் என்பதில் ஐயம் இல்லை. மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும், வளமுடனும், நலமுடனும் வாழ இந்த நாளில் இறைவனை வேண்டிக்கொண்டு, அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் எனது இனிய ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
     பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம்: உலக மக்களுக்கெல்லாம் ஈகையின் மகத்துவத்தை உணர்த்தும் அற்புதத் திருநாளாக ரமலான் கொண்டாடப்பட்டு வருகிறது.
     நட்பு, சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக இருப்பதுடன், சுய ஒழுக்கம், சக மனிதர்களிடம் இரக்கத்தைப் பேணுதலைக் கற்பிக்கிறது. இந்தத் திருநாளில் அல்லாவின் தத்துவங்களைப் பின்பற்றி இதயப்பூர்வமாக தர்மம் செய்யும் புனித பண்பை அனைவருக்கும் கற்று தருகின்றவர்களாக இஸ்லாமிய சகோதரர்கள் உள்ளனர். அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai