Enable Javscript for better performance
வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பறிமுதல்: 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பறிமுதல்: 2 பேர் கைது

    By  புதுச்சேரி,  |   Published on : 15th June 2018 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி கன்னியக்கோயில் பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்திய 81 வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
     கிருமாம்பாக்கம், கன்னியக்கோயில் பகுதிகளில் உள்ள உணவகங்கள், தேநீர் கடைகளில் சட்டத்துக்குப் புறம்பாக வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பயன்படுத்தப்படுவதாக புதுவை ஆளுநர் கிரண் பேடிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, ஆளுநர் உத்தரவின் பேரில், உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் பர்னுவால் தலைமையில், காவல் ஆய்வாளர் தனசேகரன், காவல் உதவி ஆய்வாளர் செந்தில், கிருமாம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் தன்வந்திரி உள்ளிட்ட போலீஸார் அந்தப் பகுதிகளில் உள்ள உணவகங்கள், தேநீர் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.
     இதையடுத்து, பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட 81 வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், முகவர் போல, செயல்பட்டு வர்த்தக நிறுவனங்களுக்கு வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை வழங்கிய கன்னியக்கோயில் பகுதியைச் சேர்ந்த தனக்கோடி (42), ராமு (46) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai