உள்ளாட்சித் தேர்தல்: பிற்படுத்தப்பட்டோருக்கு 34 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வரவேற்பு
By புதுச்சேரி, | Published on : 16th June 2018 08:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு 34 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்புக்கு சமூகநீதிப் பேரவை வரவேற்பு தெரிவித்தது.
இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் கீதநாதன் வெளியிட்ட அறிக்கை:
நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு 34 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க புதுவை மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. உள்ளாட்சிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது புதுச்சேரி சமூகநீதிப் பேரவையின் கோரிக்கையாகும். மாநில அரசுக்கு இவ்வாறு இட ஒதுக்கீடு செய்ய அரசியல் சட்டமும், நகர் பாலிகா , பஞ்சாயத்து சட்டங்களும் வகை செய்கின்றன. இருப்பினும், முதல் தடவையாக உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு 34 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதை கொள்கை அளவில் வரவேற்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.