Enable Javscript for better performance
தனியார் பள்ளியை கண்டித்து சமூக நல அமைப்புகள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தனியார் பள்ளியை கண்டித்து சமூக நல அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

    By  புதுச்சேரி,  |   Published on : 16th June 2018 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் நீக்கப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலில் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டதைக் கண்டித்து, சமூக நல அமைப்பினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     புதுச்சேரி மூலக்குளத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி தனது பள்ளியில் பயின்ற மாணவர்கள் சிலரை நீக்கிவிட்டு, அவர்களது மாற்றுச் சான்றிதழை அஞ்சல் மூலம் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைத்தது. இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
     இதனிடையே, பள்ளியின் போக்கைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை பெற்றோர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் சார்பில் கல்வித் துறை வாயிலில் நீதி கேட்கும் போராட்டம் நடைபெற்றது.
     புதுவை யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர் பெற்றோர்கள் நலச் சங்கத் தலைவர் நாராயணசாமி, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய மாணவர்கள் சங்கத்தின் செயலர் ஆனந்த் முன்னிலை வகித்தார். மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் ஜெகன்நாதன், விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன், தமிழர்க் களம் தலைவர் அழகர், மனித உரிமைகள் - நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் முருகானந்தம், அம்பேத்கர் தொண்டர் படை நிர்வாகி பாவாடைராயன், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி சிவா, மாநிலப் பொதுச் செயலர் ராஜசேகரன், திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி தந்தைபிரியன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நிர்வாகி வீரமோகன், அலைகள் இயக்கத் தலைவர் வீர.பாரதி உள்பட பலர்கலந்து கொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai