Enable Javscript for better performance
நீட்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான மாநில தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
     நாடு முழுவதும் மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.
     இதையடுத்து, கடந்தாண்டு நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.
     இந்த நிலையில், 2018-19 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 6-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். இவர்களில் 12 லட்சத்து 69 ஆயிரத்து 922 பேர் தேர்வு எழுதினர். இதேபோல, புதுச்சேரில் இருந்து 4,573 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து, 4,462 பேர் தேர்வு எழுதினர்.
     இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 4-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில், 7 லட்சத்து 14 ஆயிரத்து 562 பேர் தேர்ச்சி பெற்றனர். புதுவையில் இருந்து 1,769 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் மாநில வாரியான நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை சிபிஎஸ்இ வியாழக்கிழமை இரவு வெளியிட்டது.புதுவை மாநிலத்தைப் பொருத்தவரை மாணவர் விக்னேஷ் ரமணன் 720-க்கு 552 மதிப்பெண்கள் பெற்று புதுவை மாநில அளவில் முதலிடத்தையும், தேசிய அளவில் 7,190-ஆவது இடத்தையும் பிடித்தார். 550 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் அக்ஷய் 2-ஆவது இடத்தையும், 503 மதிப்பெண்கள் பெற்ற அருணாச்சலம் 3-ஆவது இடத்தையும், 498 மதிப்பெண்கள் பெற்ற ஆகாஷ் அரவிந்த் 4-ஆவது இடத்தையும், 490 மதிப்பெண்கள் பெற்ற தங்கேஸ்வர் 5-ஆவது இடத்தையும் பிடித்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai