Enable Javscript for better performance
பாகூர் குப்பைக் கிடங்கில் குப்பைகளைக் கொட்ட ஆளுநர் தடை- Dinamani

சுடச்சுட

    

    பாகூர் குப்பைக் கிடங்கில் குப்பைகளைக் கொட்ட ஆளுநர் தடை

    By  புதுச்சேரி,  |   Published on : 16th June 2018 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாகூரில் உள்ள குப்பைக் கிடங்கில் 15 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குப்பைகளைக் கொட்ட புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வெள்ளிக்கிழமை தடை உத்தரவு பிறப்பித்தார்.
     புதுச்சேரி அருகே பாகூர் குப்பைக் கிடங்கில் வியாழக்கிழமை இரவு திடீரென தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. இதனால், அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம், தனியார் காற்றுப் பகுப்பாய்வு மையம் ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டது.
     பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், தீயணைப்பு வீரர்கள் உரிய நேரத்தில் வந்து தீயை அணைத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
     இதுகுறித்து தகவலறிந்த துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சம்பந்தப்பட்ட குப்பைக் கிடங்கில் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
     பின்னர், புதுவை உள்ளாட்சி நிர்வாக இயக்குநர் மலர்க்கண்ணன், தீயணைப்புத் துறை அதிகாரிகள், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் குப்பைக் கிடங்கைச் சுற்றியுள்ள தனியார் நிறுவனங்களுடன் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஆலோசனை நடத்தினார்.
     இதையடுத்து, தனது கட்செவி அஞ்சலில் அவர் வெளியிட்ட உத்தரவு:
     திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி நிர்வாக இயக்குநர் மலர்க்கண்ணன் உத்தரவிட்டுள்ளார். பாகூர் குப்பைக் கிடங்கில் 15 கிராமங்களின் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இனிமேல் சம்பந்தப்பட்ட கிராமங்கள் தங்கள் பகுதிகளிலேயே குப்பைகளைக் கொட்டி மட்கச் செய்ய வேண்டும்.
     மத்திய அரசின் நிதி உதவியைப் பெற்று, குப்பைகளை மட்கச் செய்யும் முறையான முகமைகளின் உதவியுடன் குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நபார்டு உதவியுடன்
     மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு குப்பைகளை உரமாக்கும் பயிற்சி அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
     இதுகுறித்து பாகர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல, கிராமங்களில் காய்கறிக் கழிவுகளை இயற்கையான முறையில் மட்கச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து புதுவை மாவட்ட ஆட்சியர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
     ஆளுநரின் இந்த உத்தரவையடுத்து, இதுதொடர்பாக புதுவை உள்ளாட்சி நிர்வாக ஆணையர் மலர்க்கண்ணனும் தடை உத்தரவு பிறப்பித்து ஆணை வெளியிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai